வன்கொடுமை தடுப்பு சட்ட தீர்ப்பு விவகாரம்: ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்

Opposition-party-leaders-protest-led-by-MK-Stalin

வன்கொடுமை தடுப்பு சட்டத்தை அரசியலமைப்பு சட்டத்தின் 9-வது அட்டவணையில் இணைக்க வலியுறுத்தி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையடுத்து தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகளின் கலந்தாய்வுக் கூட்டம் கடந்த 6-ந்தேதி அன்று நடந்தது. இக்கூட்டத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பாக மத்திய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வைகோ, கனிமெழி, திருமாவளவன், பேராசிரியர் காதர்மைதீன், பாலகிருஷ்ணன், முத்தரசன், பேராசிரியர் ஜவாஹிருல்லா சுப. வீரபாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளைச் சார்ந்த முன்னணி பொறுப்பாளர்கள், தொண்டர்களும் திரளாக கலந்துகொண்டனர்

You might also like More from author