இன்று ஆர்பிஐ நாணய கொள்கை அறிவிப்பு!

overview-rbi-policy-decision-today

பணவீக்கம் 7 மாதம் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளதால் இந்திய ரிசர் வங்கி தனது நாணய கொள்கை அறிவிப்பில் ரெப்போ விகிதத்தினைக் குறைக்க வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று பிற்பகல் 2:30 மணி அளவில் ஆர்பிஐ நாணய கொள்கை அறிவிப்பை கவர்னர் உர்ஜித் படேல் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பண வீக்கம் பணவீக்கத்தின் ஆண்டு விகிதம் அக்டோபர் மாதம் 3.58 சதவீதமாக அதிகரித்துள்ளது, இது மத்திய வங்கியின் 4 சதவீத இலக்கிற்கு அருகில் உள்ளதால் ஆர்பிஐ வட்டி விகிதத்தினைக் குறைக்கக் கூடாது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். கச்சா எண்ணெய் விலை உயர்வு, உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால் பண வீக்கம் அதிகரித்துள்ளது.

ஜிடிபி முதலாம் காலாண்டுடன் ஒப்பிடும் பொது இந்தியாவின் ஜிடிபி 5.7 சதவீதத்தில் இருந்து 6.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. வளர்ச்சி அதிகரித்துள்ளதால் ஆர்பிஐ வங்கிக்கு இருந்து வந்த மிகப் பெரிய அழுத்தம் குறைந்துள்ளது.

அதே நேரம் ஜிடிபி 8 சதவீதம் அடைய நிறையை வேலை வாய்ப்பினை உருவாக்க வேண்டும். ஜனவரி 2015 முதல் 2 சதவீதம் வரை ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. தற்போதைய ரெப்போ விகிதம் இந்தியாவில் தற்போது ரெப்போ விகிதம் 6.0% ஆகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 5.75% ஆகவும் உள்ளது.

You might also like More from author