டெபாசிட் பணத்தை பாதுகாக்க,வங்கிகள் கூடுதல் கட்டணம்!

pay-extra-for-bank-deposit-amount-should-be-safety

டெபாசிட் செய்த பணத்திற்கு வங்கிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.வங்கியில் டெபாசிட் செய்த பணத்திற்கு, 1961 கடன் உத்தரவாதக் கூட்டுஸ்தாபன சட்டத்தின் படி, ரூ.1 லட்சம் வரை உள்ள பணத்திற்குக் காப்பீடு அளிக்கப்படுகிறது.

ரூ.1 லட்சம் ரூபாய்க்கு மேல் வைத்திருந்தாலும், வங்கி திவாலானால் அதிகபட்சம் ரூ.1 லட்சம் மட்டும் கிடைக்கும்.

இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வரவுள்ள எஃப்.ஆர்.டி.ஐ(FRDI) மசோதாவால், காப்பீடு பணத்திற்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறப்பட்டது.

ஆனால் புதிய மசோதா மூலம் காப்பீடு பணத்தை 12 மடங்கு உயர்த்தி தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 90% வரை வங்கி டெபாசிட் வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள்.

தற்போது வங்கி கணக்கில் டெபாசிட் செய்யும் போது ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 10 பைசா காப்பீடு என வங்கிகள் செலவு செய்கின்றன.

இதுவே மத்திய அரசு 1 லட்சம் ரூபாயாக உள்ள காப்பீடு தொகையினை 15 லட்சமாக உயர்த்தினால் வங்கிகளுக்குப் பிரீமியம் தொகையில் கூடுதல் செலவுகள் ஆகும்.

இதனை வங்கிகள் ஏற்காமல், வாடிக்கையாளர்கள் மீது ஏற்ற வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.

You might also like More from author