போக்குவரத்து ஊழியர்கள் திடீர் போராட்டத்தால் பொது மக்கள் அவதி!

People are suffering

ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் தோல்வியால் போக்குவரத்து உழியர்கள் திடீர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சென்னை மாநகரின் பல இடங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் பெரும் அவதியடைந்துள்ளனர். இதனிடையே பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் ரயில் நிலையங்களுக்கு படையெடுத்துள்ளனர்.

மக்களின் கூட்டத்தால் சென்னை புறநகர் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. வீடு திரும்ப மக்கள் அவதிப்படுவதை பயன்படுத்தி ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

You might also like More from author