நாட்டின் இரண்டாவது தலைநகரம் தென்னிந்தியாவில்?

plans-to-create-second-capital-in-South-Govt-tells

டெல்லியில் காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளதால் பாராளுமன்ற கூட்டத்தொடரை தென்னிந்தியாவில் நடத்த வேண்டும் என அதிமுக எம்.பி பேசியிருந்த நிலையில்,

தென்னிந்தியாவில் இரண்டாவது தலைநகர் அமைக்க திட்டமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

தென்னிந்தியாவில் இரண்டாவது தலைநகர் அமைக்கும் திட்டம் அரசிடம் பரிசீலனையில் உள்ளதா என தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் எம்.பி போரா நர்சையா கவுத் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு, அப்படி ஏதும் திட்டம் அரசின் பரிசீலனையில் இல்லை என மத்திய உள்துறை இணை மந்திரி ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் எழுத்துப்பூர்வமாக பதில் தாக்கல் செய்துள்ளார்.

டெல்லியில் கடும் காற்று மாசுபாடு நிலவுவதால், பாராளுமன்ற கூட்டத்தொடரை தென்னிந்தியாவில் நடத்த வேண்டும் என அதிமுக எம்.பி நவநீத கிருஷ்ணன் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like More from author