முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இன்று 93வது பிறந்த நாள்;மோடி, அமித்ஷா நேரில் வாழ்த்து

pm-modi-amitshah-wishes-to-ex-pm-atal-bihari

இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர் அடல் பிகாரி வாஜ்பாய். தற்போது உடல் நலக்குறைவால் டெல்லி இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில், அவருடைய 93-வது பிறந்த நாளை ஒட்டி பா.ஜ.க.வினர் பல்வேறு இடங்களில் இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

இந்தியாவின் புகழை சர்வதேச அரங்கில் உயர்த்தியவர் என்று அவருக்கு புகழாரம் சூட்டியுள்ள பிரதமர் மோடி, அவருடைய இல்லத்திற்கு நேரில் சென்று தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

இதே போல, பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா, மந்திரிகள் ராஜ்நாத் சிங், விஜய் கோயல் ஆகியோரும் நேரில் சென்று வாழ்த்துக்களை கூறினர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளனர்.

You might also like More from author