பேராசிரியை நிர்மலா தேவி கைது – ஆளுநர் பன்வாரிலால் அதிரடி உத்தரவு

police-files-fir-against-professor-nirmala-devi

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட அரசு நிதி உதவி பெறும் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் கணித துறை உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வருபவர் நிர்மலாதேவி (வயது46). இவர் தன்னிடம் படிக்கும் மாணவிகள் 4 பேரிடம் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்கு பாலியல் ரீதியாக ஒத்துழைப்பு தரும்படி போனில் வற்புறுத்திய ஆடியோ சமீபத்தில் வெளியானது.
இது சமூக வலைதளங்களில் பரவியதால் தமிழக கல்வித்துறை வரலாற்றில்

பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பூதாகரமாக வெடித்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் கொடுத்த புகாரின்பேரில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. முதல் கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் பேராசிரியையாக நிர்மலாதேவி சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

கல்லூரி நிர்வாகம் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டதை அடுத்து, நிர்மலா தேவி மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக விருதுநகர் மாவட்ட ஏ.டி.எஸ்.பி மதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிற்பகல் முதல் அவர் வீட்டை வெளியே பூட்டிக்கொண்டு உள்ளே இருப்பதாக அக்கம்பக்கத்தினர் தகவல் அளித்துள்ளனர்.

இதனை அடுத்து, பூட்டை உடைத்து போலீசார் நிர்மலா தேவியை அதிரடியாக கைது செய்துள்ளனர். மாஜிஸ்திரேட் முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.சந்தானம் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. தலைமை செயலாளர் அந்தஸ்திலிருந்து ஓய்வு பெற்ற சந்தானம் விரைவில் விசாரணையை தொடங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like More from author