உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்:சயகா சாட்டோவை வீழ்த்தினார் பி.வி.சிந்து

PVSindhu-won-second-league-match-of-world-superseries

உலகின் முன்னணி 8 வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டிகள் துபாயில் நேற்று தொடங்கியது.

இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் நான்காவது நிலையில் இருக்கும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 8-ம் நிலை வீராங்கனை சயகா சாட்டோவை (ஜப்பான்) எதிர்கொண்டார்.
முதல் செட்டில் சிந்து அபாரமாக விளையாடினார். இதனால் அவர் 21-13 என்ற புள்ளி கணக்கில் ஜப்பான் வீராங்கனையிடம் இருந்து ஆட்டத்தை கைப்பற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் சிறப்பாக விளையாடிய சிந்து அந்த செட்டையும் 21-12 என கைப்பற்றினார்.
இதன்மூலம், சிந்து 21-13, 21-12 என்ற நேர் செட்களில் ஜப்பான் வீராங்கனை சயகா சாட்டோவை வீழ்த்தினார்.

You might also like More from author