ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து மோடி வாய் திறக்காதது ஏன்

காங்கிரஸ் கட்சியின் 132-வது நிறுவன நாள் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரியான எ.ஒ.ஹியூம் அவர்களால் 1885 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி நிறுவப்பட்டது.

கட்சி நிறுவப்பட்டு 132-வது ஆண்டு நிறுவன நாள் இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சிக்கொடியை ஏற்றி வைத்து பின்னர், கட்சிக்காக பாடுப்பட்ட முன்னாள் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

பின்னர் பேசிய ராகுல்காந்தி, தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து நிரதமர் மோடி, வாய் திறக்காமல் இருப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.

மோடியின் ரூபாய் நோட்டு அறிவிப்பு, பணக்காரர்களுக்காக ஏழை மக்களை பலிகாடு ஆக்கும் செயல் என குற்றம் சாட்டிய ராகுல்காந்தி, நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தை போக்க மோடி நடவடிக்கை எடுக்காததற்கு கண்டத்தையும் தெரிவித்து கொண்டார்.

You might also like More from author