அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 31ல் அறிவிப்பு-ரஜினி!

Rajini-to-announce-about-his-Political-entry-on-Dec

தன்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் டிச.,31ல் தெரிவிப்பேன் என நடிகர் ரஜினி சென்னையில் ரசிகர்கள் மத்தியில் பேசுகையில் குறிப்பிட்டார்.

ரஜினி மேலும் பேசியதாவது: ரசிகர்களை மீண்டும் சந்தித்தது மகிழ்ச்சி. காலா படப்பிடிப்பு காரணமாக சந்திப்பு தாமதமானது.

அரசியல் விஷயமாக என்ன சொல்லபோறேன் என்பதை குறித்து தெரிந்து கொள்ள மக்களுக்கு ஆர்வம் உள்ளதோ இல்லையோ ஊடகங்களுக்கு அதிக ஆர்வம் உள்ளது.

போர் வரும்போது பார்க்கலாம் என கூறியிருந்தேன். போர் என்றால் தேர்தலா? அரசியல் எனக்கு புதிது அல்ல. 1996 முதல் அரசியலில் உள்ளேன். அதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள், ஆழம் அனைத்தும் தெரிந்ததால்தான் தயங்குகிறேன்.

போருக்கு சென்றால் ஜெயிக்கனும். போரில் வெற்றி பெற பலம் மட்டும் போதாது. வியூகம் முக்கியம். அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 31ல் அறிவிக்க உள்ளேன். அன்று என்ன முடிவு எடுக்க போகிறேன் என்பதைதான் தெரிவிக்கவுள்ளேன். இவ்வாறு ரஜினி பேசினார்.

You might also like More from author