கருணாநிதியை ரஜினி இன்று சந்திக்கிறார்!

rajinikanth-will-be-meeting-karunanidhi-today

முன்னாள் முதல்வர் கருணாநிதியை இன்று அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் சந்திக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். அவரது இந்த அறிவிப்புக்குப் பின்னர் அடுத்தது என்ன நடக்கவுள்ளது என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ளது.

இந்த் நிலையில் நேற்று பத்திரிக்கையாளர்களுடன் நடந்த சந்திப்பில் கட்சி கொடி தயாராகி வருவதாக ரஜினிகாந்த் தெரிவித்தார்.

ஒரு முழு அமைத்து தமிழகம் முழுவதும் புவியியல் மற்றும் அரசியல் ரீதியில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து ஆய்வு நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வின் மூலம் தமிழகத்தின் பிரச்சனைகளை அறிந்து, அதற்குத் தகுந்தவாறு அணுக இருப்பதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் இன்று கருணாநிதியை சந்திக்க நேரம் கேட்டதாகவும், இதையடுத்து, இன்று மாலை சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like More from author