ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. ரிசர்வ் வங்கி!

rbi-monetary-policy-repo-rate-unchanged

சந்தை கணிப்புகளைப் போலவே ரிசர்வ் வங்கி செப்டம்பர் நாணய கொள்கையைப் போலவே இக்கூட்டத்திலும் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் அறிவிக்காமல் பழைய வட்டி விகிதங்களை அடுத்த 2 மாதங்களுக்குத் தொடரும் என அறிவித்துள்ளது.

நாணய கொள்கை கூட்டத்தின் அறிவிப்புக்கு முன்னர்ப் பொருளாதார வல்லுனர்கள் நாட்டின் வளர்ச்சி மற்றும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைக்காது எனத் தெரிவித்தனர்.

ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளுக்கு அளிக்கப்படும் கடனுக்கான வட்டி விகிதம் ரெப்போ விகிதம் என அழைக்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் நாணய கொள்கை கூட்டமைப்பு ரெப்போ விகிதத்தை 6.25 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாகக் குறைத்து. அதன் பின் 2 நாணய கொள்கை கூட்டத்திலும் அதனை மாற்றவில்லை ரிசர்வ் வங்கி. இன்றைய கூட்டத்தின் முடிவிலும் மாற்றதாகக் காரணத்தால் அடுத்த 2 மாதங்களுக்கு ரெப்போ விகிதம் 6.0 சதவீதமாகவே நீடிக்கும்.

ரெப்போ விகிதத்தைத் தொடர்ந்து எம்எஸ்எப், எஸ்எல்ஆர் போன்ற பிற வட்டி விகிதங்களிலும் மாற்றத்தை அறிவிக்கவில்லை நாணய கொள்கை கூட்டமைப்பு. சிஆர்ஆர் விகிதம் 4% எஸ்எல்ஆர் 19.5% ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 5.75% எஸ்எஸ்எப் விகிதம் 6.25%   ஆகஸ்ட் மாதம் நடந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் 0.25 சதவீத வட்டியைக் குறைத்து 6 சதவீதமாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் கூட்டத்தில் மாற்றங்கள் ஏதும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில் தற்போது நாட்டின் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு வட்டி விகிதத்தில் மாற்றங்களை அறிவிக்கவில்லை எனத் தெரிகிறது.

நாட்டின் நுகர்வோர் விலை குறியீடு அக்டோபர் மாதத்தில் 3.5 சதவீதம் என்ற 7 மாத உயர்வை அடைந்துள்ளது.  கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையிலும், 7வது சம்பள கமிஷனில் அறிவிக்கப்பட்ட புதிய சம்பளம் வருகிற ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் எனத் தகவல்கள் வெளியான காரணத்தால், நாட்டின் வர்த்தகச் சந்தையை ஊக்குவிக்கத் தற்போது வட்டி விகிதங்களை உயர்த்தும் முடிவை கைவிட்டுள்ளது ரிசர்வ் வங்கி.

You might also like More from author