கேடி பில்லா கில்லாடி ரங்கா ரெஜினாவா இது?அதிர்ந்த ரசிகர்கள்!

reginacassandra

‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ என்னும் தமிழ் படத்தில் நடித்த ரெஜினா தற்போது வெங்கட்பிரபுவின் ‘பார்ட்டி, கௌதம் கார்த்திக்குடன் இணைந்து ‘மிஸ்டர் சந்தரமௌலி’ மற்றும் ‘அவ்’ போன்ற படங்களில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் ‘அவ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. நேற்று ரெஜினாவின் பிறந்தநாள் என்பதால் இந்த போஸ்டரை நானி வெளியிட்டார்.

மேலும்,நானி தனது ட்விட்டர் பக்கத்தில்  இந்த தோற்றத்தை கொண்டுவர மிகவும் கடினமாக உழைத்தீர்கள் என்று தெரியும். பிறந்த நாள் வாழ்த்துகள் என்று தெரிவித்திருந்தார்.

அந்தப் புகைப்படத்தில் உடல் முழுக்க பச்சை குத்தி வேறொரு வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார் ரெஜினா.

‘அவ்’ படத்தை பிரசாந்த் வர்மா இயக்குகிறார்.ரெஜினா தனது பிறந்தநாளை மிஸ்டர் சந்திரமௌலி படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

You might also like More from author