கணவன்,மாமியாரை மதித்து நடக்க வேண்டும்! உச்ச நீதிமன்றம்!
கணவனையும், மாமியாரையும் மதித்து நடக்க வேண்டும் என பெண்ணுக்கு, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தம்பதி, விவாகரத்து கோரி, பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இருவரும் சேர்ந்து வாழ, நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் கணவன், மேல் முறையீடு செய்தார். இந்த மனுவைவிசாரித்த, நீதிபதிகள், குரியன் ஜோசப், தீபக் குப்தா கூறியதாவது:கணவனும், மனைவியும் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து வாழ வேண்டும். கணவனையும், மாமியாரையும், பெண் மதித்து நடக்க வேண்டும். கணவன், மனைவி இருவரும், சில காலம் சேர்ந்து வாழ வேண்டும், என உத்தரவிட்டு, வழக்கை ஜன.,17க்கு ஒத்திவைக்கப்பட்டது.