ஆர்.கே.நகர் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை!

rk-nagars-final-candidate-list

டிசம்பர் 21 ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும்  இறுதி வேட்பாளர்களின் பட்டியல் இன்று (டிச.,7) வெளியிடப்பட உள்ளது. தொப்பிச் சின்னம் யாருக்கு ஒதுக்கப்பட உள்ளது என்பதும் இன்று மாலை தெரிய வரும்.

ஆர்.கே.நகர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் டிச.,4 ம் தேதி மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. இதில் மொத்தம் 131 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். இவர்களின் மனுக்கள் டிச.,5 மற்றும் 6 தேதிகளில் சரிபார்க்கப்பட்டது. சுயேட்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்த ஜெ., அண்ணன் மகள் தீபா, நடிகர் விஷால் ஆகியோரின் மனுக்கள் நிராகரிக்கப்படுவதாக தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது.

வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்று (டிச.,7) கடைசி நாளாகும். வேட்புமனுவை வாபஸ் பெற மாலை 3 மணி வரை அவகாசம் உள்ளதால், அதற்கு பிறகு ஆர்.கே.நகரில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட உள்ளது.

You might also like More from author