விண்வெளியில் மருத்துவ வசதி,உடற்பயிற்சி கூடம், வை-பை வசதி ஆடம்பர சொகுசு ஓட்டல்!

russia-is-planning-to-open-a-luxury-hotel-in-space-by-2022

அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட 17 ஐரோப்பிய நாடுகளின் விண்வெளி கழகமும் இணைந்து, பூமிக்கு மேல் விண்வெளியில் 400 மைல் தொலைவில், சர்வதேச விண்வெளி ஆய்வகத்தை உருவாக்கி வருகிறது.

இந்த விண்வெளி ஆய்வு மையத்தை கட்டுவதற்காக இதுவரையில், ரூ,96 லட்சத்து 75 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக, சர்வதேச விண்வெளி நிலையத்தில், 5 நட்சத்திர சொகுசு ஆடம்பர ஹோட்டலை கட்ட ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

சொகுசு ஹோட்டலில், 4 ஆடம்பர அறைகள் கட்டப்பட உள்ளதாகவும், ஒவ்வொன்றும் 4 கன மீட்டர் அளவில் இருக்கும் எனவும், இங்கு மருத்துவ வசதி, உடற்பயிற்சி கூடம் வை-பை வசதி போன்றவை ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனம் மற்றும் ரஷ்ய அரசு இணைந்து, ரூ.2100 கோடியில் இருந்து ரூ.3360 கோடி செலவில் இந்த ஹோட்டலை கட்ட உள்ளனர்.

இங்கு ராக்கெட் மூலம் வரும் சுற்றுலா பயணிகளிடம் கட்டணமாக ரூ.300 கோடி வசூலிக்கப்படும் என்றும் இங்கு 1 முதல் 2 வாரங்கள் தங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு மாதம் தங்கவும், விண்வெளியில் நடக்கவும் கூடுதலாக ரூ.130 கோடி வசூலிக்கப்படும் என கூறியுள்ள ரஷ்ய அரசு, விண்வெளியில் நடக்க ஆய்வகத்தில் தங்கியிருக்கும் வீரர்கள் உதவி செய்வார்கள் என்று தெரிவித்துள்ளது

You might also like More from author