காமன்வெல்த்:சாக்‌ஷி மாலிக் தங்கம் வென்றார்!

Sakshi-Malik-win-gold-at-Commonwealth-Wrestling

காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 62 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக் தங்கம்  வென்று அசத்தினார்.

காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வருகின்றன.

நேற்று நடைபெற்ற 62 கிலோ ஃபிரீஸ்டைல் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக் நியூசிலாந்து வீராங்கனை டைலா டுவைன் போர்டை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில்  சாக்‌ஷி மாலிக், நியூசிலாந்து வீராங்கனைக்கு எந்த வாய்ப்பும் கொடுக்காமல் 13-2 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றார். இதையடுத்து 62 கிலோ எடைப்பிரிவில் சாக்‌ஷி மாலிக் தங்கம் வென்றார்.

ஏற்கனவே, நடந்த மல்யுத்த போட்டியில் இந்திய அணி சார்பில் 74 கிலோ பிரிவில் இந்திய வீரர் சுஷில் குமார் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like More from author