முகமது சமி நிரபராதி.,ஐபிஎல் போட்டியில் விளையாட தடை இல்லை-பிசிசிஐ

Mohammed-Shami-

கிரிக்கெட் சூதாட்ட புகார் விசாரணையில் முகமது சமி நிரபராதி என நிரூபிக்கப் பட்டதால் அவர் பிசிசிஐ கிரேடு ‘பி’ பிரிவில் விளையாடுவார் என்றும், ஐபிஎல் போட்டியில் விளையாட தடை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அவரது மனைவி ஹசின் ஜஹன் புகார் அளித்தார்.

அதில் பாகிஸ்தானை சேர்ந்த அலிஸ்பா என்ற பெண் மூலம் துபாயில் கிரிக்கெட் சூதாட்டத்தில் சமி ஈடுபட்டதாக புகார் அளித்ததன் பெயரில் பிசிசிஐ ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தியது.

இதுகுறித்து பிசிசிஐ ஊழல் தடுப்பு பிரிவின் தலைவர் நீரஜ் குமார் விசாரணை அறிக்கையை, உச்சநீதிமன்றம் நியமித்த கிரிக்கெட் நிர்வாகிகள் குழுவிடம் சமர்பித்தது. இதன் அடிப்படையில் முகமது சமி நிரபராதி என்றும், அவர் எந்த சூதாட்டத்திலும் ஈடுபடவில்லை என தெரியவந்தது.

இதன் அடிப்படையில், பிசிசிஐ வெளியிட்டிருந்த சம்பள ஒப்பந்தத்தில் ‘பி’ பிரிவின் கீழ் 3 கோடிக்கு அவர் விளையாடுவார் என்றும், ஐபிஎல் போட்டியில் அவர் விளையாட தடையில்லை என்றும் தெறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like More from author