உலகின் மிகப்பெரிய ‘அமைதி வைரம்’: 65 லட்சம் டாலர்களுக்கு ஏலம் போனது!

மேற்காப்பிரிக்கா கண்டத்தில் வைரச் சுரங்கள் நிறைந்த சியெரா லியோன் நாட்டின் கோனோ மாகாணத்தின் கிழக்கு பகுதியில் உலகின் மிகப்பெரிய வெட்டப்படாத வைரக்கல்லை கடந்த மார்ச் மாதம் பாதிரியார் ஒருவர் கண்டெடுத்தார்.

முட்டை வடிவத்திலான அந்த வைரத்தை ஏலத்தில் விட்டு அதன் மூலம் கிடைக்கும் தொகையை நாட்டின் வளர்ச்சி சார்ந்த தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளுமாறு அரசிடம் அதை ஒப்படைத்தார்.
இதனால் ‘அமைதி வைரம்’ என பெயரிடப்பட்ட இந்த வைரக்கல்லை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரபல நிறுவனம் நேற்று ஏலத்தில் விட்டது. சுமார் 70 பேர் இந்த வைரத்தை பார்வையிட்டு தரத்தை ஆய்வு செய்தாலும், 7 பேர் மட்டுமே ஏலம் கேட்டனர்.
இதில் பிரிட்டன் நாட்டை சேர்ந்த பிரபல நகை தயாரிப்பாளர் லாரன்ஸ் கிராப் இந்த வைரத்தை 65 லட்சம் டாலர்களுக்கு வாங்கியுள்ளார்.

You might also like More from author