என் நண்பர் கேட்டுக்கொண்ட ஒரே காரணத்திற்காக இசையமைத்தேன்!

simbu

சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் `சக்க போடு போடு ராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிம்பு பேசும் போது, மணிரத்னம் படத்தின் படப்பிடிப்பு குறித்து மனம் திறந்துள்ளார்.

பன்முகத் திறமைகளை கொண்டவரான நடிகர் சிம்பு சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார்.
சேதுராமன் இயக்கியுள்ள இப்படத்தை விடிவி கணேஷ் தயாரித்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.
என் நண்பர் சந்தானம் கேட்டுக்கொண்ட ஒரே காரணத்திற்காக தான் இந்த படத்திற்கு இசையமைக்க ஒத்துக்கொண்டேன்.
அவரது வளர்ச்சிக்கு நான் எப்போதும் பக்கபலமாக இருப்பேன் என்றார். பின்னர், அன்பானவன் அடங்காதவன் அசராதவன் பட சர்ச்சை குறித்து மனம் திறந்து பேசினார். அதில் தன் மீதும் சில தவறுகள் இருக்கும் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன்.
ஆனால் இதுபோன்ற விஷயங்களை பற்றி பேசுவதற்கு ஒரு முறை உள்ளது, அவர்கள் செய்தது சரியல்ல. நான் நல்லவன் என்று சொல்லவில்லை. நடந்தது நடந்துவிட்டது அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
மணிரத்னம் இப்போதும் நான் படத்தில் இருக்கிறேன் என்று தான் கூறிவருகிறார். அவருக்கு என் மீது ஏன் அவ்வளவு நம்பிக்கை என்று தெரியவில்லை. அவரும் உங்களை போல எனது ரசிகரா என்பதும் தெரியவில்லை. 20-ம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என கூறியிருக்கிறார்.
அந்த படத்தில் நடிப்பதற்காகவே தன் உடம்பை குறைக்க முயற்சி செய்து வருகிறேன். இருப்பினும் அது சற்று கடினமாக இருக்கிறது. விரைவில் நல்லது நடக்கும் என நம்புகிறேன். என்றார்.

You might also like More from author