சோலார் சார்ஜர் கண்டுபிடிப்பு:அரசு பள்ளி மாணவர்களுக்கு “இளம் விஞ்ஞானிகள்”விருது

young-scientists-award

தர்மபுரி அருகே சோலார் சார்ஜர் கண்டுபிடித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு, தேசிய அறிவியல் கவுன்சில் இளம் விஞ்ஞானிகளுக்கான விருதை வழங்கியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே நல்லாம்பட்டியைச் சேர்ந்த மாதேஷ் மகன் சக்திவேல்(14). அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். சக மாணவர்களான திருமலைவாசன், யுவன்சங்கர், அன்பரசு, ஸ்ரீகாந்த் ஆகியோர் இணைந்து சோலார் சார்ஜர் (பவர் பேங்க்) கண்டுபிடித்துள்ளனர்.

நேற்று முன்தினம், சென்னை சத்தியபாமா பொறியியல் கல்லூரியில், தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சி மற்றும் இளம் விஞ்ஞானிகளுக்கான அறிவியல் படைப்புகளின் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில், இந்திய அளவில் 250 அறிவியல் கண்டுபிடிப்பு ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், சோலார் சார்ஜர் கண்டுபிடிப்பு குறித்து 80 பக்க ஆய்வறிக்கை தாக்கல் செய்தனர்.

பள்ளி ஆசிரியர் மாதேஷ், நல்லாம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அன்பழகன் ஆகியோர் வழிநடத்தினர். இதில், சக்திவேல் மற்றும் திருமலைவாசன், யுவன்சங்கர், அன்பரசு, ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு தேசிய அறிவியல் கவுன்சில் அதிகாரிகள், இளம் விஞ்ஞானிகளுக்கான விருதை வழங்கினர். விருது பெற்று திரும்பிய மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

 

You might also like More from author