பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு.,மாறன் சகோதர்கள் விடுதலை!

பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கிலிருந்து மாறன் சகோதர்கள் உள்ளிட்ட 7 பேரையும் விடுவித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பிஎஸ்என்எல் சட்டவிரோத தொலைப்பேசி இணைப்புகள் தொடர்பான வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபரில் மாறன் சகோதரர்கள் தரப்பில் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டது.

கடந்த வாரம் இந்த மனு விசாரணைக்கு வந்த போது நீதிபதி நடராஜன் இதற்கான தீர்ப்பு மார்ச் 14ஆம் தேதி வழங்கப்படும் என்று அறிவித்தார். இதன்படி,

இன்று மதியம் 2.30 மணிக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

You might also like More from author