9 தமிழக கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு அந்தஸ்து:பிரகாஷ் ஜவடேக்கர்!

சிறப்பாக செயல்படும் 60 மத்திய, மாநில, தனியார் கல்வி நிறுவனங்களை தேர்வு செய்து சிறப்பு அந்தஸ்து வழங்க யுஜிசி முடிவு செய்துள்ளது. இவற்றில் 9 கல்வி நிறுவனங்கள் தமிழகத்தை சேர்ந்தவை.

சென்னை அண்ணா பல்கலை,

காரைக்குடி அழகப்பா பல்கலை,

சென்னை ராமச்சந்திரா மருத்துவ பல்கலை,

தஞ்சாவூர் சாஸ்தா பல்கலை,

சென்னை எஸ்ஆர்எம் பல்கலை,

வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி,

கோவை அம்ரிதா விஸ்வ வித்யா பீடம்,

சென்னை டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம்,

சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி கழகம்,

சென்னை மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம், ஆகியவை இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களுக்கு மனித வள மேம்பாடு படிப்புக்கள், புதிய ஆராய்ச்சி படிப்புக்கள் உள்ளிட்ட புதிய துறைகள் சார்ந்து படிப்புக்களை துவங்கவும், அவற்றை வெளிநாட்டு தரத்தில் வழங்கவும் அனுமதி வழங்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார். 5 மத்திய பல்கலை, 21 மாநில பல்கலை, மற்றும் 26 தனியார் பல்கலைகளுக்கு இந்த சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like More from author