திருச்சியில் 2வது நாளாக தொடரும் துப்புரவு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

trichy Strike by regular cleaning staff

திருச்சிராப்பள்ளி,ஏப்,10,

உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம்

அரசாணை 2(டி)62ன் படி மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் ரூ 11,236.16 வழங்கக்கோரி திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம்(சிஐடியு) சார்பில் திங்களன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க திருச்சி மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார்.

காத்திருப்பு போராட்டத்தின் 2வது நாளான செவ்வாய் அன்று உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க திருச்சி மாவட்ட தலைவர் பழனிவேல் நிருபர்களிடம் கூறியதாவது :
தமிழகம் முழுவதும் 12,524 ஊராட்சிகளில் ஒஎச்டி ஆபரேட்டர்கள் ரூ 2,720 மட்டுமே மாத ஊதியமாக பெற்று வருகின்றனர். உள்ளாட்சிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் திருத்தி அமைக்க சிஐடியு நடத்திய போராட்டத்தின் விளைவாக கடந்த 2014ம் ஆண்டு குறைந்த பட்ச ஊதிய மறு நிர்ணயக்குழு அமைத்து 11.10.2017 அரசு ஆணை மூலம் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த கோரிக்கைகள் தொடர்பாக முதல்வர், உள்ளாட்சித்துறை அமைச்சர், ஊரக வளர்ச்சி செயலர், ஊரக வளர்ச்சி இயக்குனர், மாவட்ட ஆட்சியர் என அனைத்து அதிகாரிகளிடமும் மனு கொடுத்து ஓய்ந்து விட்டோம். இனியும் பட்டினி கிடக்க முடியாது. அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியத்தை அமலாக்கும் வரை இந்த காத்திருப்பு போராட்டம் தொடரும் என்றார்.
காத்திருப்பு போராட்டத்தை விளக்கி சிஐடியு மாவட்ட தலைவர் சிவராஜ், மாவட்ட நிர்வாகிகள் பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினர். போராட்டத்தை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன் பேசினார்.
போராட்டத்தில் மருங்காபுரி ஒன்றிய செயலாளர் ராமசாமி, மணப்பாறை சுப்ரமணி, துறையூர் சரவணன், தா.பேட்டை கனகராஜ், தொட்டியம் நதியா, ரவி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருச்சி மாநகராட்சியில் பணிபுரியும் சுயஉதவிக்குழு தொகுப்பூதிய துப்புரவு பணியாளர்களுக்கு அரசாணை எண் 2(டி)எண் 62படி தினக்கூலி ரூ 625 உடனே வழங்க வேண்டும். முன்அறிவிப்பின்றி நிறுத்தப்பட்ட டிபிசி டெங்கு நோய் தடுப்பு பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கி தினக்கூலி ரூ 577 வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு தொழிலாளர் சங்கம், டெங்கு நோய் ஒழிப்பு பணியாளர் சங்கம்(சிஐடியு) சார்பில் திங்களன்று திருச்சி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் குடும்பத்தோடு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இரவு முழுவதும் அங்கேயே தங்கி போராட்டத்தை தொடர்ந்தனர்.
2வது நாளாக செவ்வாய் அன்று நடைபெற்ற போராட்டத்திற்கு  துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் இளையராஜா தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மணிமாறன், மாவட்ட பொருளாளர் நாகராஜ், மாவட்ட துணைத்தலைவர் தர்மா, மாவட்ட துணைசெயலாளர்கள் ஜெய்குமார், கிச்சான், சுப்ரமணி, மாவட்டக்குழு உறுப்பினர் வெங்கடே~; ஆகியோர் பேசினர்.
trichy Strike by regular cleaning staff
trichy Strike by regular cleaning staff
காத்திருப்பு போராட்டத்தை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, சிஐடியு மாவட்ட தலைவர் ரெங்கராஜன், பொன்மலை பகுதிக்குழு செயலாளர் கார்த்திகேயன், கிழக்கு பகுதிக்குழு செயலாளர் சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன்,  அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன், சாலை போக்குவரத்து சங்க பொதுச்செயலாளர் சீனிவாசன், துணைத்தலைவர் கருணாநிதி, ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் வீரமுத்து, குமார், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மோகன், மாவட்ட துணைசெயலாளர் தீன், தமுஎகச சுரேந்திரன், மாதர்சங்க புவனேஸ்வரி, நாகலெட்சுமி ஆகியோர் பேசினர்.
காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடும் வகையில் துப்புரவு தொழிலாளர்கள் மாநகராட்சி அலுவலக வளாகத்திலேயே தங்கி, சமைத்து சாப்பிட்டு வருகின்றனர்.

You might also like More from author