டெல்லியில் சக்தி வாய்ந்த நில அதிர்வு- பொதுமக்கள் பீதி!

-earthquake

டெல்லியில் இன்று இரவு சக்திவாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் பொதுமமக்கள் பெரும் அச்சமடைந்தனர்.

டெல்லியில் இன்று இரவு கடுமையான நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.5 அலகுகளாகப் பதிவாகி இருந்தது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலியை மையமாகக் கொண்டு இந்த நில அதிர்வு ஏற்பட்டிருந்தது. அம்மாநிலத்தின் ஹரித்துவார், ருத்பிரயாக் உள்ளிட்ட பல இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

இதன் எதிரொலியாகவே டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் நில அதிர்வு ஏற்பட்டிருக்கிறது. இந்நில அதிர்வால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்தனர்.

You might also like More from author