முன்னாள் பிரபஞ்ச அழகியான சுஷ்மிதா சென், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக முதுகின் கீழ்ப்பகுதியில் டாட்டூ வரைந்துள்ளதை வெளியிட்டுள்ளார்.
தமிழில் நாகார்ஜூனா நடித்த ரட்சகன் படத்தில் அறிமுகமானார் சுஷ்மிதா. பின் இந்தியா முழுதும் பல மொழிகளில் நடித்து வந்தார். சமீபகாலமாக இவருக்கு சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் வரவில்லை.
அவ்வப்போது தனது ஹாட் படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வரும் அவர், சமீபத்தில் வெளியிட்ட வொர்க்-அவுட் வீடியோ வைரலானது.
இந்நிலையில் தற்போது அவர் சில தனது இடுப்பில் டாட்டூ வரைந்துள்ளதை காட்டியுள்ளார் சுஷ்மிதா சென். புலியும், தாமரையும் இந்த டாட்டூவில் இடம்பெற்றுள்ளன.