டி.வி.,செல்போன்கள் சுங்கவரி 10ல் இருந்து 20 சதவீதமாக உயர்வு!

tariff-for-Foreign-TV-and-cellphone-rise-from-10

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் டி.வி., செல்போன்கள், மைக்ரோ ஓவன்கள் போன்ற உற்பத்திக்கான சுங்கவரி 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

தற்போது வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் டி.வி., செல்போன்கள், மைக்ரோ ஓவன்கள் போன்றவற்றுக்கு சுங்கவரி 10 சதவீதமாக உள்ளது.

இது உள்நாட்டில் தயாரிக்கப்படும் டி.வி., செல்போன்கள் விலையை விட குறைவாக இருப்பதால் வெளிநாட்டில் இருந்து அதிகம் இறக்குமதி செய்யப்படுகிறது.

இதனால் உள்நாட்டில் உற்பத்தியாகும் டி.வி., செல்போன்களின் விற்பனை பாதிக்கப்படுவதுடன் சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்படுவதும் அதிகரிக்கிறது.

எனவே வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் டி.வி., செல்போன்கள், மைக்ரோ ஓவன்கள் போன்ற உற்பத்திக்கான சுங்கவரி 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

இதனால் இனி இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு செல்போன், டி.வி., மைக்ரோ ஓவன் போன்றவற்றின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

You might also like More from author