Home breaking கொடூரன் தஷ்வந்த் மும்பையில் தப்பியோட்டம்!தேடும் பணி தீவிரம்!

கொடூரன் தஷ்வந்த் மும்பையில் தப்பியோட்டம்!தேடும் பணி தீவிரம்!

27
tashwant-escape
tashwant-escape

தாயை கொன்று, 25 சவரன் நகைகளுடன் தலைமறைவான, கொடூரன் தஷ்வந்த் மும்பையில் கைது செய்யப்பட்ட நிலையில் போலீஸார் பிடியிலிருந்து தப்பியோடினான்.

சென்னை போரூரில் சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த குற்றவாளி தஷ்வந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளிவந்தான். குன்றத்துாரில், 25 பவுன் நகைகளுக்காக பெற்ற தாயையே கொன்றுவிட்டு தஷ்வந்த் தலைமறைவானான். அவனை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டது. தஷ்வந்த் நண்பர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், 5 நாட்கள் தலைமறைவாக இருந்த தஷ்வந்த்தை, மும்பையில் போலீசார் நேற்று(டிச.,6) கைது செய்தனர். இதையடுத்து அவனை தமிழகத்திற்கு கொண்டு வர அனுமதிக்க கோரி மும்பை பந்த்ரா கோர்ட்டில் போலீசார் இன்று ஆஜர்படுத்தினர். சென்னை அழைத்து செல்ல அனுமதித்த நீதிபதி, நவ.,9ம் தேதிக்குள் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

இந்நிலையில் கோர்ட்டில் இருந்து திரும்பி செல்லும் வழியில், மும்பை விமான நிலையம் அருகில் போலீஸ் பிடியில் இருந்து தஷ்வந்த் தப்பியோடினான். மும்பை போலீசாரின் உதவியோடு அவனை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.