நீரிலும், நிலத்திலும் தரையிறங்கும் விமானம் வெற்றிகரமாக சோதனை!

The-worlds-largest-amphibious-aircraft-takes-flight

சீனா முதல் முறையாக நீரிலும், நிலத்திலும் தரையிறங்கும் உலகின் மிகப்பெரிய விமானத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இந்த விமானத்தை தயாரிக்க எட்டு ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஏஜி600 ரக விமானத்திற்கு ‘குன்லாங்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதன் முதல் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. அந்த விமானத்தின் சோதனை ஓட்டம் சீனாவின் அரசு தொலைகாட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த விமானம் 37 மீட்டர் நீளம் கொண்டது. அதன் சிறகுகள் 38.8 மீட்டர் நீளமானவை. இதில் மொத்தம் 4 இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுவே, நீரிலும், நிலத்திலும் தரையிறங்கக் கூடிய மிகப்பெரிய விமானமாகும். இந்த விமானம் கடலில் மீட்பு பணியிலும், காட்டுத்தீ அணைப்பதற்கும், கடலோர கண்காணிப்பு பணிக்கும் பயன்படுத்தப்படும்.

சுமார் 50 பேர் பயணம் செய்யக் கூடிய இந்த விமானத்தில் 20 நொடியில் 12 டன் தண்ணீரை பீய்ச்சி அடித்து காட்டுத்தீயை அணைக்க முடியும்.

ஒரே நேரத்தில் 370 டன் தண்ணீரை கொண்டு செல்ல முடியும். இந்த விமானத்தை வாங்க ஏற்கனவே 12 நாடுகள் முன்பதிவு செய்துள்ளன.

You might also like More from author