உலகின் அதிக சேமிப்புத் திறன் ஹார்டு டிஸ்க் அறிமுகம்.

100TB சேமிப்புத் திறன் கொண்ட உலகின் மிகப்பெரிய ஹார்டு டிஸ்க் அறிமுகமாகியுள்ளது.

அமெரிக்க நிறுவனம் வெளியிட்டுள்ள நிம்பஸ் டேட்டா எக்ஸா டிரைவ் டிசி100 (Nimbus Data ExaDrive DC100) என்ற ஹார்டு டிஸ்க் உலகிலேயே மிக அதிக சேமிப்புத் திறன் கொண்ட ஹார்டு டிஸ்க் என்ற பெயரைப் பெற்றுள்ளது.

3D NAND பிளாஷ் மெமரி கொண்ட இதில் சராசரியாக 20 ஆயிரம் HD திரைப்படங்கள், 2 கோடி பாடல்கள் பதிவுசெய்ய முடியும். ரீட் மற்றும் ரைட் செய்யும் போது நொடிக்கு 500MB வேகத்தில் செயல்படும்.

இந்த ஹார்டு டிஸ்க் எந்த நிபந்தனையும் இல்லாத 5 ஆண்டு உத்திரவாதத்துடன் விற்கப்படும் என்று நிம்பஸ் நிறுவனம் கூறியுள்ளது.

You might also like More from author