வேலைநிறுத்தம் வாபஸ் – நாளை முதல் தியேட்டர்கள் இயங்கும்

theatre

திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக இன்று மாலை நடந்த பேச்சுவார்த்தையில் தமிழக அரசு அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளதால் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 8 சதவீத கேளிக்கை வரி, பராமரிப்பு கட்டணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16-ஆம் தேதி முதல் சென்னை தவிர்த்து தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களை மூடி திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில், இன்று மாலை திரையரங்கு உரிமையாளர்கள், தமிழக அரசு அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அதில் திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அரசு அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளதால் நாளை முதல் திரையரங்குகள் இயங்கும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

You might also like More from author