திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் நன்கொடை நூலகள் பெறும் விழா மாவட்ட நூலக அலுவலர் அர.கோகிலவாணி தலைமையில் நேற்று நடைபெற்றது.
வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறுகளில் நடைபெறும் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வு இலவச பயிற்சி சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு காலை 10 மணி முதல் மாலை 5 மணி முடிய சிறந்த முறையில் நடைபெற்றுவருகிறது.
இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பயின்று வருகின்றனர். “போட்டி தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறுவது எப்படி?” எனும் தலைப்பில் சிறப்பு விருந்தினர் கோட்டை அமீர் விருது பெற்ற சாதிக் பாஷா போட்டி தேர்வாளர்கள் பயன்பாட்டிற்கு ரூ. 12 ஆயிரம் மதிப்புள்ள குரூப் 1, 2, 4 மற்றும் +2 மாணவர்களுக்கான நீட் தேர்வு நூல்கள், இயர் புக், பொது அறிவு ஆகிய நூல்களை நன்கொடையாக வழங்கினார்.
மைய நூலக குறிப்புதவி பிரிவில் உள்ள அணைத்து போட்டி தேர்வு நூல்களை தேர்வாளர்கள் தவறாது பயன்படுத்தி வெற்றி பெறுமாறு முதல் நிலை நூலகர் பெ.வள்ளி கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் நல்நூலகர்கள் சாயிராம், சுந்தரேசன், கிருஷ்ணன் மற்றும் ஏராளமான மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
—————————— —————————— —————————— —————-