தமிழ்நாடு சாலைகள் ரூ. 608 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்!

TNGovernor-speech-to-1436-km-roads-be-upgraded

தமிழக சட்டசபை இன்று கூடியது. கவர்னர் உரையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உலக வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் ‘தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்’ இரண்டாம் கட்டப் பணிகளும் முக்கிய இணைப்புச் சாலைகளை மேம்படுத்த உதவி வருகின்றன.

கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து, 7,964 கிலோ மீட்டர் நீள முள்ள 2,596 ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியச் சாலைகளை, இதர மாவட்டச் சாலைகளின் தரத்திற்கு மேம்படுத்த அரசு முடிவு செய்து, நெடுஞ்சாலைத் துறைக்கு இச்சாலைகளை ஊரக உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து மாற்ற உத்தரவிட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் முதற்கட்டமாக, 2017-18 ஆம் ஆண்டில் 1,436 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளை ரூ. 608 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன

You might also like More from author