திருச்சியில் வ .உ .சி .நலப்பேரவை திருச்சியில் ஆர்ப்பாட்டம்

trichy VOC

வ .உ .சி .நலப்பேரவை திருச்சியில் ஆர்ப்பாட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம்
,அண்ணாசிலை அருகில் .காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்ச நீதீமன்றம்
உத்தரவிட்டும், அமைக்க மறுக்கும் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது .

வ .உ .சி .யின் பிறந்தநாளை வக்கீல்கள் தினமாக மத்திய அரசு அறிவிக்க
வேண்டும் .பாராளுமன்றத்தில் வ .உ .சி.சிலை நிறுவவேண்டும். பள்ளி ,கல்லூரி,அரசு
அலுவலகங்களிலும் வ .உ .சி .படம் இடம் பெற வேண்டும் .

மத்திய அரசால் நிறுவப்படும்பல்கலைக்கழகத்திற்கு வ .உ .சி பெயர் சூட்டப்படவேண்டும் ,வெள்ளாளர் ,வேளாளர் என்ற எங்கள் சமுதாயத்தின் அடையாளத்தை வேறு எந்த சமுதாயத்திற்கும் வழங்கக்கூடாது .
திருச்சி கோர்ட் அருகிலுள்ள வ .உ .சி.சிலை அருகிலுள்ள டாஸ்மாக் மதுபான கடை,மற்றும்
சிலையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சிலை பராமரிப்பை மாநகராட்சி நிர்வாகமே
எடுத்து நடத்த வேண்டும் .

தூத்துக்குடி ஸ்டெர் லைட் ஆலையை மூடநடவடிக்கை எடுக்கவேண்டும் .என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சிமாநகர் ,புறநகர்மாவட்ட மக்கள் தலைவன் வ .உ .சி .நலப்பேரவை சார்பில் . மாநில பொதுச் செயலாளர் எஸ்.கே .டி .பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காந்தி மார்க்கெட்வியாபாரிகள்முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கமலக்கண்ணன் , வ .உ .சி .நலப்பேரவை மாநில அவைத்தலைவர் ஜெகதீசன் ,மாநில ஒருங்கிணைப்பாளர் நமச்சிவாயம் ,புறநகர்
மாவட்ட தலைவர் மணிகண்டன் , ,புறநகர் மாவட்டஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் ,புறநகர்
மாவட்டதுணைத் தலைவர் அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்

You might also like More from author