ராணுவத்தில் அரசியலை நுழைக்க முயற்சி! ஜெனரல், பிபின் ராவத் குற்றாசாட்டு!

ஜெனரல், பிபின் ராவத்

”ராணுவத்தில் அரசியலை நுழைக்க முயற்சி நடந்து வருகிறது. ஆனால், அரசியலில் இருந்து ராணுவம் விலகி இருக்க வேண்டும்,” என, ராணுவத் தலைமை தளபதி ஜெனரல், பிபின் ராவத் கூறினார்.

டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ராணுவத் தலைமை தளபதி ஜெனரல், பிபின் ராவத் பேசிய தாவது:முந்தைய காலத்தில், ராணுவத்தில் பெண்கள் மற்றும் அரசியல் குறித்து பேசப்படாது. தற்போது அது, படிப்படியாக மாறி வருகிறது. அது தொடர்பான விவாதங்கள் நடக்கின்றன.

ராணுவம் எப்போதும் அரசியலில் இருந்து விலகியே இருக்க வேண்டும். மிகவும் துடிப்பான ஜனநாயகத்தை கொண்டுள்ளோம். ராணுவத்தில் அரசியல் சேராமல் பார்த்து கொள்ள வேண்டும். ஆனால், சமீப காலமாக ராணுவத்தில் அரசியல் கலக்கப்படுகிறது. இது நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் ரயில்வே நடைபாலம் அமைக்கும் பணி, ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அது தவிர, ராணுவத்தினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகைக்கு உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.இது குறித்து, கப்பற்படை தளபதி அட்மிரல் சுனில் லம்பா விமர்சனம் செய்தார். இந்நிலையில், ராணுவத் தளபதி இவ்வாறு கூறியுள்ளார்.

You might also like More from author