இந்தியா முழுவதும் புதிதாக 21 அணுஉலைகள்!

union-govt-says-no-idea-of-close-nuclear-power-plants

நாடுமுழுவதும் புதிதாக 21 அணுஉலைகள் தொடங்கப்படும் என்று இந்திய அணுசக்தி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய அணுசக்தி துறை அமைச்சகம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தற்போது நாடு முழுவதிலும் 22 அணுஉலைகள் செயல்பாட்டில் உள்ளன. இவற்றின் மூலம் 6 ஆயிரத்து 780 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது.

மேலும் மின் தேவையை பூர்த்தி  செய்ய இந்தியா முழுவதிலும் கூடுதலாக 21 அணுஉலைகளை திறக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான வரைவு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

உலகம் முழுவதிலும் 448 அணுஉலைகள் செயல்பட்டு வருகின்றன.இந்தியாவில் செயல்பாட்டில் உள்ள எந்த அணுஉலையையும் மூடும் திட்டம் அரசுக்கு இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like More from author