குஜராத் முதல்வராக விஜய் ருபானி பதவியேற்றார்!

குஜராத் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்று கொண்டது. கவர்னர் ஓம்பிரகாஷ் கோலி, முதல்வர் விஜய் ரூபானி, துணை முதல்வராக, நிதின் படேல் ஆகியோருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர்களாக 18 பேர் பதவியேற்றனர்.

காந்திநகரில் தலைமை செயலகம் அருகே உள்ள மைதானத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, மத்திய அமைச்சர்கள் பா.ஜ., ஆளும் 18 மாநிலங்களின் முதல்வர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

You might also like More from author