சி.பி.எஸ்இ. பாடப்புத்தகத்தில் தளபதி விஜய்,கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

vijays-tamilnadu-culture-costume-in-cbse-school-book

சிபிஎஸ்இ பாடப்புத்தக்கத்தில் தளபதி விஜய்யின் பாரம்பரிய வேஷ்டி சட்டை அணிந்த புகைப்படம் இடம் பெற்றுள்ளது.தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களில் ஒருவர். வருடத்திற்கு இரண்டுக்கும் அதிகமான படங்களை வெளியிட்டு வருகிறார்

இந்த ஆண்டில் பைரவா மற்றும் மெர்சல் படங்கள் வெளியாகியது. இதில், மெர்சல் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தததோடு ரூ.254 கோடி வசூலும் படைத்துள்ளது.

இப்படத்தில் தமிழரின் பாரம்பரியமான வேஷ்டி சட்டையில் விஜய் நடித்து கலக்கியிருப்பார். மேலும், மருத்துவராக மருத்துவ துறை சம்பந்தமான விருது பெறுவதற்காக வெளிநாட்டிற்கு செல்லும் போது கூட வேஷ்டி சட்டையிலேயே வந்து அசத்தியிருப்பார். இந்தக் காட்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

vijay
vijay

இந்த நிலையில், சிபிஎஸ்இ 3வது வகுப்பு பாடப்புத்தகத்தில் வேஷ்டி சட்டை தமிழர்களின் பாரம்பரியம் என்ற ஒரு தலைப்பில் விஜய்யின் வேஷ்டி சட்டை புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

இது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் பண்டிகையைப் பற்றிய அந்த வரியில் வேஷ்டி சட்டை தான் தமிழர்களின் பாரம்பரிய உடை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு, வேலாயுதம் படத்தில் விஜய் வேஷ்டி சட்டையுடன் நடந்து வரும் போட்டோவும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like More from author