ஆஸ்திரேலிய வீரர்கள் வார்னர், ஸ்மித் கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை

Warner, Smith Cricket one year ban

]ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலிய வீரர் பான் கிராப்ட் பந்தை சேதப்படுத்திய விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

இதனையடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் ஆகியோர் த பதவி பறிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இந்தியன் பிரீமியர் லீக்கின் ஐதராபாத் அணி கேப்டன் பதவியில் இருந்தும் வார்னர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் கிரிக்கெட் விளையாட ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஒராண்டும், பான் கிராப்ட்க்கு 9 மாதங்களும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

You might also like More from author