இந்தியாவில் முற்றிலும் நீர் நிலைகள் வறண்டு போகும்:ஆய்வில் திடுக்கிடும் தகவல்

Water that disappears in India

இந்தியாவில் உள்ள அணைகள், நீர் நிலைகளில் முற்றிலுமாக நீர் வறண்டு போகும் அபாய நிலை நெருங்கி வருவதாக ஆய்வில் திடுக்கிடும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் உள்ள அணைகள், நீர்நிலைகளில் இருக்கும் நீரின் அளவு குறித்து செயற்கைகோள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், உலகம் முழுவதும் உள்ள 500,000 அணைகளில் நீர்அளவு மிக வேகமாக குறைந்து வருகிறது.

இந்தியாவில் விரைவில் முற்றிலும் நீர் நிலைகள் வறண்டு ‘டே ஜீரோ’ என்ற அளவை எட்டும் அளவிற்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படும். தட்பவெப்ப மாறுபாடு, நீர் வீணடிப்பு காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நீரின் அளவு வறண்டு, கடும் வறட்சி ஏற்பட்டு வருவதை உணர்த்தும் செயற்கைகோள் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆதாரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த ஆய்வின் முடிவு, விரைவில் இந்தியாவில் குழாய்களில் முற்றிலும் நீர் வறண்டு போகும் என்ற முந்தைய எச்சரிக்கையை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

உலக அளவில் இந்தியாவுக்கு அடுத்து மொராக்கோ, ஈராக், ஸ்பெயின் ஆகிய நாடுகள் இருக்கின்றன.

You might also like More from author