பொங்கல் பரிசாக பயணிகளிடம் டிக்கெட்டுக்கு காசு வாங்கமாட்டோம்!

we-wont-collect-fares-from-passengers-if-we-are-forced-to-return-to-work

தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் பணிக்குத் திரும்பினாலும் பயணிகளிடம் டிக்கெட்டுக்கு காசு வாங்கமாட்டோம் போக்குவரத்து ஊழியர்கள் அரசுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.

ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர்ந்து 5 நாட்களாக வேலை நிறுத்த போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

இதனால் போதிய பேருந்து வசதி இல்லாமல் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். பல பேருந்துகள் தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் இயக்கப்படுகின்றன. இதனால் பல இடங்களில் விபத்துக்கள் நேர்கின்றன.

தற்காலிக ஓட்டுநர்களை நம்பி பேருந்தில் எப்படி ஏறுவது என்று பயமாக இருக்கிறது. உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் பயணித்துக்கொண்டிருக்கிறோம்.” என்று பொதுமக்கள் பலர் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், திருச்சியில் போராட்டம் நடத்திவரும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி வைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.

மேலும், தங்களைக் கட்டாயப்படுத்தி பணிக்கு அனுப்பினால், பொங்கல் பரிசாக பயணிகளிடம் டிக்கெட்டுக்கு காசு வாங்கமாட்டோம் என்றும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like More from author