தமிழக பா.ஜ  தலைவர் அடுத்தது யார்?.. திவிர வேட்டையில் பா.ஜ ?

BJP leader?

தமிழக பா.ஜ  தலைவர் தமிழிசையின் பதவிக் காலம் விரைவில் முடியப் போகிறது.
இரு முறை தலைவர் பதவியில் இருந்து விட்டதால், மீண்டும் தலைவராக வாய்ப்பில்லை.

தற்போது ராஜ்யசபாவுக்கு காலியாகி இருக்கும் பதவியில் ஒன்றை வாங்கி, மத்தியில் அமைச்சராகி விட வேண்டும் என்ற துடிப்பிலும் உள்ளார். இதற்காக, டில்லி பா.ஜ., தலைவர்கள் பலரையும் தொடர்ந்து சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் தமிழிசையின் பதவிக் காலம் முடியப் போவதைத் தொடர்ந்து, புதிய தலைவரை தேர்வு செய்வதில், பா.ஜ., தலைமை களம் இறங்கி உள்ளது.

அடுத்த தலைவர் போட்டியில், வானதி சீனிவாசன், கே.டி.ராகவன், சி.பி.ராதாகிருஷ்ணன், சீனிவாசன், எச்.ராஜா ஆகியோர் இருப்பதாக டில்லி பா.ஜ., வட்டாரங்களில் கூறப்படுகிறது.

You might also like More from author