வெற்றி, தோல்வியை சீரியஸாக எடுத்துக்கொள்வது இல்லை : ஸ்ருதிஹாசன்

ஐதராபாத் படப்பிடிப்பில் இருந்த ஸ்ருதிஹாசன் கூறியதாவது:

தென்னிந்திய படங்களில் எனக்கு மிகவும் அருமையான கேரக்டர் கிடைத்து வருகிறது. ஆனால், எல்லாப் படத்திலும் அற்புதமான கேரக்டர் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இதுவரை நடித்த ஒவ்வொரு படமும் என் வளர்ச்சிக்கு உதவி செய்திருக்கிறது. பாலிவுட்டிலும் ஒரே சாயல் கொண்ட கேரக்டரில் நடிப்பதைத் தவிர்த்து வருகிறேன். சினிமா துறையைச் சேர்ந்த குடும்பம் என்பதால், எனக்கு ஏதாவது நிர்ப்பந்தம் இருக்கிறதா என்று கேட்கிறார்கள்.

அப்படி எதுவும் இல்லை. எங்கள் குடும்பம் சினிமா துறையில் இருந்தாலும், எல்லா நேரத்திலும் சினிமா பற்றி பேசிக்கொண்டிருக்க மாட்டேன். மற்ற குடும்பங்களில் உள்ளதைப் போலவே வழக்கமான விஷயங்களையும் பகிர்ந்துகொள்வோம். நானும், என் தங்கை அக்‌ஷராவும் சினிமா சம்பந்தமான பணிகளை தனிப்பட்ட முறையிலேயே வடிவமைத்துக் கொண்டிருக்கிறோம். படங்களின் வெற்றி, தோல்வியைப் பற்றி பிரித்துப் பார்ப்பது கடினம்.

சில நேரங்களில், எதிர்பார்க்காத வெற்றி கிடைக்கும். சில நேரங்களில், தோல்வி ஏற்படும். தோல்வியைக் கையாள்வது கடினமான விஷயம் என்றாலும், அதுதான் வாழ்க்கையை மாற்றக்கூடிய மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது. வெற்றி, தோல்வியை சீரியஸாக எடுத்துக்கொள்வது இல்லை. 10 படங்களில் நடித்தால், 10 படங்களும் ஹிட்டாக வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

You might also like More from author

Facebook Auto Publish Powered By : XYZScripts.com