Home திருவண்ணாமலை திருவண்ணாமலை அருகே பெண் தற்கொலை

திருவண்ணாமலை அருகே பெண் தற்கொலை

15

திருவண்ணாமலை, ஜன 10

வயிற்று வலி தாங்காமல் பெண் தற்கொலை செய்து கொண்டது
குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம்
வாணாபுரம் அருகே தென்கரும்லூரைச் சேர்ந்தவர் சிவலிங்கம்(45).விவசாயி.

இவரது மனைவி ஆண்டாள்(40). இவருக்கு சில நாட்களாக தீராத வயிற்று வலி
இருந்து வந்துள்ளது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 1ந்
தேதி வலி அதிகமாகவே வீட்டிலிருந்த எலி மருந்தை எடுத்து சாப்பட்டு
மயங்கியுள்ளார்.

உடன் வீட்டிலிருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக
திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஆண்டாள் கடந்த 6ந்
தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.| இது குறித்து இறந்துபோன ஆண்டாளின் தாயார்
காசியம்மாள்(55) வாணாபுரம் போலீசில் அளித்த புகாரின் பேரில் எஸ்எஸ்ஐ
செல்வக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்