உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகம் உயிரிழப்பு!

male white rhinoceros

உலகின் கடைசி ஆண் வெள்ளை காண்டாமிருகம் கென்யாவில் உயிரிழந்துள்ளது.கென்யாவிலுள்ள Ol Pejeta வனவிலங்களுக்கான தனியார் அமைப்பு  வெளியிட்ட அறிக்கையில்,” உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டமிருகம் இறந்துவிட்டது.

45 வயதான சுடானுக்கு கடந்த சில மாதங்களாக உடல் நிலையில் சரிவு காணப்பட்டது.

சுடானுக்கு வயது முதிர்வு காரணமான தசை மற்றும் எலும்புகள் மோசமான அளவில் பாதிக்கப்பட்டிருந்தன. தோலில் காயம் ஏற்பட்டிருந்தது. கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அதன் நிலைமை மிக மோசமாகியது. அதனால் எழுந்து நிற்க முடியாத நிலைமை ஏற்பட்டது.

கடந்த சில மாதங்களாக சுடானை உயிருடன் வைக்க நாங்கள் எடுத்த முயற்சி அனைத்தும் தோல்வியில் முடிந்தது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுடான் இரண்டு வெள்ளை பெண் காண்டாமிருகங்களான நஜின், ஃபட்டு ஆகியோருடன் வசிந்து வந்தது. இந்த நிலையில் சுடான் உயிரிழந்துள்ளதால் அந்த இனத்தில் இரண்டு பெண் காண்டா மிருகங்கள் மட்டுமே தற்போது உலகில் உள்ளன.

சுடானின் இந்த இழப்பு வனவிலங்கு ஆர்வலர்களிடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like More from author