அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு -விசாரணை தீவிரம்

நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌‌ஷரா ஹாசன். இந்தியில் அமிதாப் பச்சனும், தனுஷும் இணைந்து நடித்த ‌ஷமிதாப் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் அஜித் குமார் நடித்த விவேகம் படத்திலும் நடித்திருந்தார். இதனையடுத்து தற்போது விக்ரமுடன் ஒரு படத்தில் நடித்துவருகிறார்.
இந்த நிலையில், கடந்த வாரம் அக்‌‌ஷராவின் அந்தரங்க படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதுபற்றி அக்‌‌ஷரா வெளியிட்ட அறிக்கையில் ’இந்தப் படங்கள் ஒரு படத்தின் டெஸ்ட் ஷூட்டின்போது எடுக்கப்பட்டவை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவை இணையத்தில் கசிந்துள்ளன. இவ்விவகாரத்தில் புகார் அளிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறேன்’ என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து இது தொடர்பாக மும்பை வெர்சோவா காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், காவல் துறையினருடன் இணைந்து சைபர் கிரைம் பிரிவினரும் தீவிரமாக இந்த வழக்கில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதன்மூலம் புகைப்படத்தை முதலில் வெளியிட்ட கணினியின் ஐபி முகவரியைக் கண்டறிய முயற்சி செய்து வருகின்றனர். இவ்விவகாரத்தில் குற்றவாளி யார் என்பது விரைவில் கண்டுபிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like More from author