அஜித் நிலைமை என்னவாகுமோ? அச்சத்திலும் ஆச்சரியத்திலும் திரையுலகம்

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் ஆரம்பத்தில் வருடம் வருடம் தன்னுடைய பிறந்த நாளான மே 1-ல் படங்களை ரிலீஸ் செய்வதை வழக்காக பின்பற்றி வந்தார்.

ஆனால் 14 வருடங்களுக்கு முன்பாக இவரது பிறந்த நாளில் வெளியான ஜனா படம் படு தோல்வியை சந்தித்தது.

இதனால் அன்று முதல் தன்னுடைய பிறந்த நாளில் படங்களை ரிலீஸ் செய்வதை நிறுத்தி கொண்டார்.

அதுமட்டுமில்லாமல் மே 1-ல் தன்னுடைய பிறந்த நாள் கொண்டாட்டங்களை நிறுத்தி கொண்டார்.

இந்நிலையில் தற்போது போனி கபூர் மற்றும் வினோத்தால் தன்னுடைய முடிவை மாற்றி கொண்டுள்ளார்.

எப்படியோ தல 59 படத்தை தன்னுடைய பிறந்த நாளான மே 1-ல் ரிலீஸ் செய்ய ஒப்பு கொண்டுள்ளார்.

14 வருடத்திற்கு பிறகு தல ரிஸ்க் எடுப்பதால் ரசிகர்களும் திரையுலகமும் அஜித்தின் நிலை என்னவாகும்? இந்த முயற்சி கை கொடுக்குமா? என்ற அச்சத்தில் உள்ளனர்.

அதே சமயம் அஜித் தன்னுடைய முடிவை மாற்றி கொண்டிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான் எங்களுக்கு தலய மாஸாக கிளாஸா திரையில பார்க்கணும் அவ்வளவு தான்.

You might also like More from author