அஜித் ரசிகர்களுக்கு இன்று செம ட்ரீட் – விஸ்வாசம் டீமிடம் இருந்து வந்த அறிவிப்பு.!

அஜித் ரசிகர்களுக்கு இன்று செம ட்ரீட் ஒன்று காத்திருக்கிறது. இது குறித்த அறிவிப்பை விஸ்வாசம் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு, கோவை சரளா, விவேக், தம்பி ராமையா என பலர் இணைந்து நடித்திருந்தனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று இன்று வரை வெற்றிநடை போட்டு வருகிறது.

இது ஒரு புறம் இருக்க தயாரிப்பு நிறுவனமும் விஸ்வாசம் படத்தின் வீடியோ பாடல்களை ஒவ்வொன்றாக வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.

அந்த வரிசையில் இன்று மாலை 7 மணிக்கு விஸ்வாசம் படத்தின் BGM வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

You might also like More from author