அதிக விலைக்கு விற்பதைத் தடுக்க அரசு புதிய முடிவு-  மணல் தேவைப்படுவோரின் வீடுகளுக்கே நேரடி விநியோகம்: கிலோ மீட்டருக்கு நியாயமான லாரி வாடகை நிர்ணயம்

மணல் அதிக விலைக்கு விற்பதைத் தடுக்க தேவைப்படுவோரின் வீடு களுக்கு நேரடியாக மணல் விற் பனை செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணியும் தொடங்கப் பட்டுவிட்ட தால் விரைவிலேயே இப்புதிய முறை குறித்த அறிவிப்பு வெளி யாகும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாடு மிகப்பெரிய பிரச்சினையாக இருக் கிறது. மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகள், நீதிமன்ற நிபந் தனைகள் காரணமாக நினைத் தவுடன் மணல் குவாரியைத் திறக்க முடிவதில்லை.

மணல் தட்டுப்பாடு காரணமாக தனிப்பட்ட முறையில் வீடு கட்டுபவர், பராமரிப்புப் பணி செய்வோர், குடியிருப்புகள், வணிக வளாகங்கள் கட்டும் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் மட்டு மல்லாமல் அரசு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த தாரர்களும் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் தினமும் சரா சரியாக 35,000 லாரி லோடு மணல் தேவைப்படுகிறது. ஆனால், தினமும் சராசரியாக 6,000 லாரி லோடு மணல் மட்டுமே கிடைக்கிறது. குறித்த காலத்துக் குள் கட்டுமானப் பணியை முடிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பவர்கள் 2 யூனிட் கொண்ட ஒரு லாரி லோடு மணலை ரூ.50,000 வரைகூட விலை கொடுத்து வாங்கினர்.

மக்களிடம் விழிப்புணர்வு

எனவே, மணல் தட்டுப் பாட்டைப் போக்க அரசு பல் வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எம்-சாண்ட் (நொறுக்கப் பட்ட கல்மணல்) பயன்பாட்டை அதிகரிக்க மக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்துகிறது.

வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து, மலேசியாவிலிருந்து இது வரை ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 750 மெட்ரிக் டன் ஆற்று மணல் தூத்துக்குடி மற்றும் சென்னை எண்ணூர் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்துள்ளது. தூத்துக்குடி துறை முகத்துக்கு வந்துள்ள மணலின் தரம் மூன்று கட்டங்களாக ஆய்வு செய்யப்பட்டு இன்றுமுதல் (செப்.25) விற்பனை தொடங்கு கிறது.

மணல் தேவைப்படுவோர் www.tnsand.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து, பணத்தை செலுத்த வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் மணல் விற்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னை எண் ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு மலேசியாவில் இருந்து 56,750 மெட்ரிக் டன் மணல் நேற்று முன்தினம் வந்து சேர்ந்தது.

கப்பலில் இருந்து இறக்கப்பட்ட மணல், சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் திறந்தவெளியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த மணலுக்கான விலையை நிர் ணயிப்பது குறித்து அதிகாரிகள் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர்.

இதுதொடர்பாக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு வந்து இறங்கியுள்ள மலேசிய நாட்டு ஆற்று மணல் உரிய ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மூன்று கட்ட ஆய்வு முடிந்து கட்டுமானப் பணிக்கு ஏற்றது என்று அறிக்கை கிடைத்ததும், அக்டோபர் முதல் வாரத்தில் மணல் விற்பனை தொடங்கும்.

வெளிநாட்டு மணலுக்கு மக்களிடம் கிடைக்கும் வர வேற்பைப் பொறுத்து கூடுதலாக மணல் இறக்குமதி செய்யப்படும். சுமார் 30 லட்சம் மெட்ரிக் டன் மணல் இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

லாரி வாடகையால் விலை உயர்வு

தேவைக்கேற்ப உடனுக்குடன் கப்பல் மூலம் மணல் கொண்டு வரப்படும். லாரி வாடகையால்தான் மணல் அதிக விலைக்கு விற்கப் படுகிறது என்பதால் தமிழக பொதுப்பணித் துறையே மணல் தேவைப்படுவோரின் வீட்டுக்கு கொண்டு போய் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான விதிகள், வழிமுறை கள் உருவாக்கப்படுகின்றன. பின் னர், கிலோ மீட்டருக்கு நியாயமான லாரி வாடகை நிர்ணயம் செய்யப் படும். இதுகுறித்த அரசு அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

தூத்துக்குடியில் உள்ள மணல் ஒரு யூனிட் (4.5 டன்) விலை ரூ.9,900 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எண்ணூர் துறைமுகத்தில் உள்ள மணல் ஒரு யூனிட் விலை ரூ.10,000 முதல் ரூ.11,000-க்குள் இருக்கும் என்றார்.

தகுதியானவர்களுக்கு மணல் கிடைப்பதை உறுதி செய்ய உரிய சான்றிதழ்களுடன் சிமென்ட், உரம் விற்பனை செய்வது போல மணலையும் விற்பனை செய்ய வேண்டும் என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.

விஏஓ சான்றிதழ்

உள்ளூர் கிராம நிர்வாக அலு வலர் சான்றிதழ், குடும்ப அட்டை, வரைவோலையுடன் வருபவர் களுக்கே சிமென்ட் வழங்கப் படுகிறது. அதுபோல விவசாய நிலத்துக்கான ஆவணம், ஆதார் அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே உரம் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

You might also like More from author