அதிபர் கிம் சொத்து மதிப்பு விவரம்…

சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பு மற்றும் வடகொரிய அதிபர் கிம் இருவரும் சந்தித்து பேசி அணு ஆயுதங்கள் குறித்து ஆலோசனை நடத்தி சில முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர்.

  
இந்த சந்திப்பிற்கு முக்கிய காரணம் வடகொரியா மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகள் உட்பட பல தடைகள் நீக்கப்பட வேண்டும் என்பதற்காகவே என கூறப்படுகிரது. இந்த சந்திப்புக்கு பின்னர் கிம் பற்றிய சில தகவலகள் வெளியாகியுள்ளன.
அவற்றில் ஒன்று அவரது சொத்து மதிப்பு. 34 வயதான கிம் கடந்த 2011 ஆம் ஆண்டு வடகொரியாவின் ஜனாதிபதியானார். 2018 ஆம் ஆண்டு கிம்மின் சொத்து மதிப்பு சுமார் 5 முதல் 8 பில்லியன் பவுண்ட் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதில் பாதி கிம் சட்ட விரோதமாக சம்பாதிக்கப்பட்டவை என்று தெரிகிறது. அதாவது, தந்தம் கடத்துதல், போதை பொருள் கடத்தல் போன்றவைகள் மூலம் கிடைத்ததாக தெரிகிறது. அதேபோல், கிம் ஆண்டிற்கு சுமார் 440 மில்லியன் பவுண்ட்டை செலவு செய்கிறார், அதில் 22 மில்லியன் பவுண்ட் மதுபானம் குடிப்பதற்கே செலவு செய்கிறாராம்.

You might also like More from author